நாங்களே ராஜாக்கள்
இதுதான் எல்லோரும் மன்னரா
உலகில் பலநாடு சோடையில்லை சூரர்
நிலமெலாம் மேற்கும் கிழக்காம் -- விலக்கில்லா
மொத்தம் முடிசூட்டடா முன்னரே ஆண்டாராம்
அத்தம்வந் தார்காட்டார் பார்
அத்தம் = வழி. வந்தவழி
இந்தியரில் ஆண்டா யிரமுன்னே தீண்டாதார்
நந்தலின்னு மிங்கே வளருதாம் -- விந்தை
கதையை யவரும் விடுக்க செவியி
லதைநாம் மடுக்கும் கதி
நந்தல் == பெருகுதல்
அடிமைகள் அரசர்களா்க பேரரசர்களாக இந்தியாவை ஆண்ட
அடையாள கோபுரம் குதுப்மினார். பறைசாற்ற நிற்கிறது.
ஆனால் இந்தியாவின் நமது தலித்துகள் பழைய கதைகளை
அலுக்காது சொல்லி நல்லாட்சி நடத்த விடாது செய்கிறார்கள்.
மேலும் நாங்கள் இங்கே ஆண்டோம் அங்கே ஆண்டாம் என்று
எல்லா ஜாதியினரும் தொடைதட்டி மார்தட்டி கிளம்பி விட்ர்டார்கள்.
இதன் விளைவு நம்மை எங்கு கொண்டு செல்லுமோ தெரிய
வில்லை.
.....