AUTOGRAPH SIR
அட்டை பளபளப்பு
மங்காத
நுனி மடங்காத
பக்கங்கள் நிறைந்த
புத்தம் புதிய
எனது கவிதைப் புத்தகம்
பழைய பேப்பர்காரனிடம்
கொடுத்தேன்
தராசுத் தட்டில் நிறுத்து எடுத்து
புத்தகத்தை என்னிடம் நீட்டி
ஆட்டோகிராப் சார் என்றான்
என் கண்ணில்
நீர்
வ
ழி
ந்
த
து
......