பட்ட மரம்

பட்ட மரங்கள் பசியாத்தாது படிப்பினை தரும்

பட்ட மரம்;
வெட்டுப்பட தவிக்கும்; துடிக்கும் பட்ட கிழட்டு மரம் தான்;
பட்ட மரம் தான்;
பசியாத்தி ஓய்ந்த மரம் தான்;
தளிர்த்து தல தல வென்று,
பசுமையை சுமந்த மரம் தான்
பல பல பறவைகள தங்கி வாழ
இடம் தந்த வாசக தளம் தான்;

நிழலாய் நின்ற நெடு மரம் தான்;
நீ கிளைகளை வெட்டினாலும்
விழும் வரை உனக்கு நிழல் தந்த
விரிந்து கிடந்த உசர்ந்த மரம் தான்;

நிழலாய் நின்ற நெடுமரங்கள்;
பசியை போக்கிய நன்மரங்கள்;
மண்ணுக்குள் வேர்களைப் பரப்பி
மனிதனுக்கு மூச்சு காற்றை உன்னதமாக தந்த
உயிர் ஜீவன்கள் தான்
மகத்தான செயல்களைச் செய்த மா (சிறந்த) மரம் தான்;
மனித குலத்தையே காத்திட இயற்கையை சுமந்து வந்த மரங்கள்தான்;
அன்று பலன் தந்த பழம் தந்த மரம் தான்
இன்று பழுத்த மரம் தான்
கிளைகள் காய்ந்து இலைகள் தளிர்காது கிடக்கும் கிழட்டு மரம்தான்;
அன்று வேருன்றி விருச்சமாக வளர பல விதைகளைத் தந்த மரம் தான்;
பாடுபட்டு வந்தவனுக்கு, இளைப்பார நிழல் தந்த மரம் தான்
பசுமையை அன்று தந்த மரம் தான்
ஆடும் கிளைகளை அசைத்து;
அன்றாடம் உனக்கு சுவாசம் தந்த மரம் தான்;
அழகாய் விரிந்து உன்னை லயக்கவைத்த, அழகு மரம் தான்;
கிளைகளில் தொங்கி இளைகளைப் பரித்தும் கனிகளை கொய்தும் சிறார்களை விளையாட விட்டு
சிரித்து மகிழ்ந்த அந்த இளமரம் தான்
மரச்சாமன்களையும் கதவுகளையும் செய்ய
தன் கிளைகளையே காணிக்கையாய் தந்த , சுயநலம் இல்லா மரம் தான்

இன்று சறுகாய் காய்ந்து கிடந்து
கீழே விழத் தவிக்கும் இந்த
கிழட்டு மரம்;

சாய்தே போக கிடந்தாலும்,
காய்ந்தே சுள்ளியாக, விறகாக; வீணாப்போகாமல், உதவ நினைக்கிது,
காய் கனிகள் தந்து ஓய்ந்த காய்ந்த மரம் இது.

தன் கடமைகளைச் செய்து
ஒடுங்கி ஓய்ந்து போன மரம் தான்;
ஓரம் கட்டப்பட்ட மரம் தான்;
மொட்டை மரம் என்றே
முதுமையிலும் அவலப்பேரை சுமக்கும் முதிர்ந்த மரம் தான்;

அன்று காற்றும் கனியும் தந்த மரம் தான்;
பூத்து குலுங்கி
பூவை பரப்பி பூமி அன்னையை அழகு படுத்திய மரம் தான்;

பறவைகள் பாவையர்களின்;
காதல் காவியத்தை வளர்த்த மரம் தான்;
இன்று
வெட்ட வெளியில் மொட்டையாக கிடக்கும் பட்டமரம் தான்;
பலம் இழந்த மரம் தான் பலன் தறாத மரம் தான்;
பயன் படாதா மரம் தான்;

சட்டென்று யோசித்து
பட்டென்று முறிக்கத் துடிக்காதே;
முதுமை சுமக்கும் மரம் தான்;
பாடுபட்டு அது தந்த பலனை நினைத்து;
பயனற்ற மரம் மானலும்;
படிப்பினை ஊட்டும் மரம் தான்;
பட்டமரம் என்றாலும் விறகு கட்டையாக, கட்டையையும் தகனம் செய்ய உதவம் பட்ட மரம் தான்

நீயும் ஒரு நாள் பழுத்த மரமாய்
வலு இழக்கத்தான் செய்யவேண்டும்
தனிமையைத் தாங்க வேண்டும் என்பதை
நினைவு கூறும் பட்ட மரம் தான்;
வெட்ட நினைத்தாலும்,
கண்ணிர்; சொட்டியே வெட்டிவிடு;
வேறு ஒரு மரத்தை நடவும் நினைத்திடு,
பட்ட மரங்கள் பசியாத்தாது படிப்பினை தரும் தான்.

முதுமையை மதித்திடு
முழுமனதுடன் முழுமையாய் உதவிடு
அன்பன்
அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (16-May-22, 9:31 am)
Tanglish : patta maram
பார்வை : 305

மேலே