நட்புக் கோவிலின் தோராட்டம்

புல்வெளி... மரங்கள்
செடி கொடிகளின் பசுமை...
நட்பின் இனிமையை
தோழியின் காமிரா
படம் பிடித்தது...

நட்பின் வேர்கள் தந்த விலாசம்...
விழுதுகளாய் என்றும் சந்தோசம்...
காமிரா பார்க்காத தோழர்களின்
கண்கள் சொல்லியது...

அழகிய விடியல் ஒன்றில்...
நிரம்பி வழியும் நட்பின் வசந்தம்..
அது தரும் சந்தோசம் பார்த்து
மனதில் இசை ஒன்றின் ரீங்காரம்...

இதைச் சொல்ல யாழ்கள்
இங்கு தேவை இல்லை...
இனிமை ரசிக்க பொழுதுகள்
இங்கு போதவில்லை...

சுற்றுலாக்கள் மூலம்...
நட்புக் கோவிலின் தோராட்டம்
ஆண்டுக்கு ஆண்டு வரட்டும்...
முன்னாள் மாணவர் கூடி
தேர் இழுப்போம்..
தோழமை வடங்கள்
பிடித்துக் குதூகலிப்போம்...
😀👍🌹💐

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (16-May-22, 6:11 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 422

மேலே