மயக்கும் மழலை

வெண்மதியை ஒத்த
தாயின் அழகில்
மதிமயங்கிய மழலை...

உறக்கம் கலையாத
மயக்க நிலைதனில்
தன் மஞ்சத்து தோழியின்
துணையுடன்....

வெண்மதியை ஒத்த
தாயென நினைந்து
வெண்மதியிடமே உறக்கம்
தொடர தொடர்கின்றாளோ?

எழுதியவர் : கவி பாரதீ (17-May-22, 9:15 am)
சேர்த்தது : கவி பாரதீ
Tanglish : mayakkum mazhalai
பார்வை : 250

மேலே