காதல் சமர்வாள்

கானலிலே மீனெனவே பாயும் - புதுக்
காதலெலாம் காலத்திலே மாயும் - ஒரு
கன்னலெனும் புன்னகையில் உன்னுயிரில் மின்னவரும்
காரிகை அன்புத் தூரிகை
*
மானமுடன் வாழவரும் மங்கை - கவரி
மானதற்கு டன்பிறவா தங்கை - அவள்
மஞ்சளது நெஞ்சமதில் தஞ்சமிடப்
பஞ்சணையில்
மலர்வாள் காதல் சமர்வாள்
*
மெய்யன் நடராஜ்
(காவடிச்சிந்து)

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (17-May-22, 2:11 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 83

மேலே