வீதி உறக்கம்
கோணி கூரைகளில்
கோமகனாய்
குட்டி உறக்கம் ...
விழித்த இரவின்
வாகன இரைச்சலில் .
முற்றிலுமாய்
நிகந்த உரக்க நெரிசல் ..
காற்றோட்டமாக
நிகழ்ந்த
மரத்தடி உறக்கத்தை
மெல்ல கலைத்தது
பறவைகளின்
துயில் முறிப்பு எச்சம் ...
பிள்ளைகளை கிள்ளி
தாயின் தூக்கத்தை
பறித்தது
பசியின் ரணம் ...
ஒட்டு மொத்த தூக்க
ஏங்கிகளையும்
உசுப்பிவிட்டு விட்டு
விடிந்தது
பெரிய கொண்டை
ஒலிபெருக்கி சேவல் ...
நாளையும்
நிகழும்
கோணி கூரைகளில்
கோமகனாய்
குட்டி குட்டியாய் உறக்கங்கள்...