நினைவெல்லாம் நிஜங்கள்
சிரிக்கத்தூண்டிய
சித்திரங்களும்
சிந்தனை யினை யும்
தூண்டியாயிற்று.....
உட்கார்ந்திருந்த
நாற்காலி யில்
மனம் உட்காரவே
எண்ணுது....
ஆசிரியரின்
கடிந்த சொல்லும்
கருணையோடு
கரைகடந்தாயிற்று...
வார விடுமுறை
ஓசை யும்
வலசைக்கு
ஆயத்தமாகிறது.....
எங்கிருந்தோ
வண்ணத்துப்பூச்சிகளாக
வந்தோம்....
வண்ண வண்ணப் பூக்களை
வட்டமிட்டோம்....
இனி என்ன செய்வது
காலத்தின் கட்டாயம்
சூழ்நிலை
நம்மைப் பிரிக்கின்றது....
இப்போது
பிரிந்து செல்வோம்
மீண்டும்
ஒன்று சேர் வோ ம்
விண்மீன் கூட்டங்களாக...