உண்மைகள் 2

வலக்கரமாக இருந்தவர்
இளக்காரமாகிப் போவது
இல்லாத பணத்தால் தானே !

சூடேறிய மணலை
கட்டித் தழுவி முத்தமிடும்
கடலோர அலைகள்

இந்நாளொரு பொன்நாளென
எந்நாளும் சொன்னாலென்ன
குறைந்தா போகும் மனிதநேயம்

காக்காமல் கைவிட்டால்
கரை சேருமா?—இல்லை
கறை படுமா?

இரைப்பை என்றும்
அரைப்பையா யிருந்தால்
உயிர்ப்பை நீட்டலாமே !

நெஞ்சைக் கலங்கவைத்து
வஞ்சித்து போனவளால்
மிஞ்சும் வாழ்க்கை எஞ்சுமா ?

பசிக்குக் காசு கேட்டேன்
போடாது போனவர்கள்
புதை இடத்தில் போடுகிறார்களே !

கருங்குயில் பாட
கோல மயிலாட—காணும்
கருமேகம் ஆர்ப்பரிக்குதோ !

எழுதியவர் : கோ. கணபதி. (19-May-22, 9:45 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 46

மேலே