நினைவிலும் கனவிலும் நீயே

நினைவிலும் கனவிலும் நீயே!
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

நினைவுகளின் குவியலுக்குள்
நீக்கமற நிறைந்தேன்!

கனவுகளின் காட்சிகளில்
கண்மறைவாய்ப் புகுந்தேன்!

கண்பாவை ஓரத்தில்
என்வீடு சமைத்தேன்!

நின்பார்வைப் படுவதற்காய்
நெடிய தவம் புரிந்தேன் !

நினையாத நேரத்தில்
வருவாயே நீயும்!

நிலையான பெரும்பேற்றின்
சிகரத்தில் நானும் !

புரியாத புதிர் யாவும்
வெளியாகும் நேரம் !


மெய்யான அன்பொன்றே
மேதினியை ஆளும் !!

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (18-May-22, 9:34 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 229

மேலே