பெயர் அல்ல பெருமை

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
என்பது பெயர் அல்ல பெருமை

தமிழ்த்தாயின் தலைமகன் நீ
தலைவர் கலைஞரின் திருமகன் நீ
அறிஞரின் அரசியல் வாரிசு நீ
பகுத்தறிவு பகலவனின் பேரன் நீ
தமிழர்களின் பாகுபலி நீ
தமிழ்நாட்டின் ஒளி நீ
உடன்பிறப்புகளின் உயிர் நீ
தொண்டர்களின் தோழன் நீ
திமுக வின் காவலன் நீ
கயவர்களுக்கு காலன் நீ
அன்பிற்க்கு அடிபணிவாய் நீ
அதிகாரத்தை அடிபணிய வைப்பாய் நீ
தமிழனை நேசிப்பதில் தாயுமானவன் நீ
தவறுகளை கண்டிப்பதில் தகப்பனும் நீ
தமிழர்களின் பாசத்திற்க்கு அதிபதி நீ
தமிழ்நாட்டின் இணையற்ற தளபதி நீ
மக்கள் விரும்பியது உன் ஆட்சியை
உன் வெற்றியே அதற்கான சாட்சி
திராவிடத்தின் நிறைவான முன்னேற்றம் நீ
தமிழகத்தின் நிரந்தர முதல்வரும் நீ
உன் தன் பெயரே தமிழனின் அடையாளம்
உன் தன் செயலே தமிழ்நாட்டின் வருங்காலம்

எழுதியவர் : தமிழ் அன்பு நேசன் (20-May-22, 4:41 pm)
சேர்த்தது : Sikkandar
Tanglish : peyar alla perumai
பார்வை : 1191

மேலே