பூசிப் பொதிந்த புலாலுடம்பு ஊசல் கயிறற்றாற் போலக் கிடக்குமே – அறநெறிச்சாரம் 113
நேரிசை வெண்பா
ஆசையும் பாசமும் அன்பும் அகத்தடக்கி
பூசிப் பொதிந்த புலாலுடம்பு - ஊசல்
கயிறற்றாற் போலக் கிடக்குமே கூற்றத்(து)
எயிறுற்(று) இடைமுரிந்தக் கால் 113
– அறநெறிச்சாரம்
பொருளுரை:
பொருள்கள்மேல் வேட்கையையும் உற்றார்பால் தளைப்பட்ட அன்பையும், மனைவிபால் வைத்த காதலையும் உள்ளே அடக்கி, தசையால் கட்டிய புலால் நாற்றம் வீசும் உடம்பானது,
எமனது பல்லில் சிக்கி அழிந்திடும் போது, கயிறறுந்த ஊஞ்சலே போல அது செயலற்று வீழ்ந்து கிடக்கும்.