காதல் பயணம்

நீ போற தனியா,
நா வாரேன் துணையா,
வாழ்வோமா! இணையா,
வாழும் வரைக்கும் வாழ்க்கை இனிக்கும்,
வாழ்ந்து பார்ப்போமா?....

நா போறேன் தனியா,
நீயும் வரலாம் துணையா,
வாழ்வோமே! இணையா,
வாழும் வரைக்கும் வாழ்க்கை இருக்கும்,
வாழ்ந்து பார்ப்போமே!....

நா போனே தனியா,
நீயும் வந்தாய் துணையா,
வாழ்ந்தோமே, இணையா,
வாழ்த வரைக்கும் வாழ்க்கை சிறப்பு,
வாழ்ந்து பார்த்தோமே....

எழுதியவர் : satheeshjames (21-May-22, 3:34 pm)
சேர்த்தது : Satheeshjames
Tanglish : kaadhal payanam
பார்வை : 90

மேலே