என் விழிகளுக்குள் அவள் உறங்குகிறாள் 555

***என் விழிகளுக்குள் அவள் உறங்குகிறாள் 555 ***


ன் கனவே...


கண்ணுக்குள் இருக்கும் கனவே
நீ கலைந்துவிடாதே...

சுற்றிவரும் பூமியே உன்
வேகத்தை குறைத்துக்கொள்...

சூரியன்
தாமதமாக உதிக்கட்டும்...

என் விழிகளுக்குள்
அவள் உறங்கு
கி
றாள்...

அவளோடு நான் கைகோர்த்து
காதல் வானில் பறக்கிறேன்...

அவளின் விழி மீன்களுக்கு
வா
னத்து மீன்கள் எல்லாம் ஈடாகுமா...

கையேடு என் இதயத்தை
அள்ளி சென்றவள்...

இன்று வானி
ல்
பறக்க வைக்கிறாள்...

அவள் கண்கள் இரண்டும்
இருவரி கவிதைகள்...

அவளோடு வாழ நினைத்

வாழ்க்கை எல்லாம்...

இன்று காதல் உலகில்
வாழ்ந்து பார்க்கிறேன்...

காற்றில் மிதந்து
செல்லும் வெண்மேகத்தில்...

அவளும் நானும்
நடைபோடுகிறோம்...

விடியாத ஆயிரம் இரவுகள்
வேண்டும் அவளோடு...

இந்த காதல் வானில்...

கதிரவ
னே நீ உதிக்காமல்
சில காலம் ஓய்வெடுத்துக்கொள்...

நான் உலவருகிறேன்
அவளோடு உறங்காமல்.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (21-May-22, 4:45 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 263

மேலே