நாட்டு வாழை - கருவாழைச் சமூலம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நாட்டுக் கதலியது நாருந் துவர்ப்பதனால்
தீட்டுபித்தம் ஐயஞ் செருக்குங்காண் - நாட்டுகரு
வாழை திரிதோஷம் ஆற்றும் அதன்கிழங்கால்
ஆழுஞ் சுரங்குருத்து வம்

- பதார்த்த குண சிந்தாமணி

துவர்ப்பான நாட்டு வாழை பித்த ஐய தோடங்களை உண்டாக்கும்; கருவாழை திரிதோடங்களை நீக்கும்; இதன் கிழங்கு சுரத்தையுண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-May-22, 5:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 4

மேலே