மணித்தக்காளி சமூலம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு)

காய்க்குக் கபந்தீருங் காரிகையே யவ்விலைக்கு
வாய்க்கிரந்தி வேக்காடு மாறுங்காண் - தீக்குள்
உணக்கிடு வற்ற லுறுபிணியோர்க் காகும்
மணித்தக்கா ளிக்குள்ள வாறு

மணித்தக்காளியின் காய்க்கு சிலேட்டும நோயும், இலைக்கு நாப்புண்ணும் வேக்காடும் நீங்கும்; இதன் வற்றல் நோயாளிகளுக்கு நல்லது

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-May-22, 5:53 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே