நம்காதல் அன்புமலர்
நம் காதல்
கண்ணே கற்கண்டே!
உண்மைக் காதலர்கள்
இருக்குமிடம் தெரியாது.
நாமோ போலிக் காதல் ஜோடி
கண்ட இடத்தில் எல்லாம்
காண்பவர் காறித்துப்ப
சில்மிஷம் செய்வோம்.
எல்லாவற்றையும் துடைத்தெறிந்த
நமக்கு எத்தனைபேர் துப்பினாலும்
இடையூறு அது ஆகாது.
மூன்று வேளை உணவோடு
அடிக்கடி நொறுக்குத் தீனி
இதுபோல் தான் நம் காதல்.
நமக்கு காதலர் தினம்
நாள்தோறும் உண்டு
பொது இடம் சந்து பொந்து
எல்லா இடமும் நம்
காதல் சாம்ராச்சியத்தில் அடக்கம்.
வா, வா என் தங்கமே,
உனக்கும் எனக்கும்
பிடிக்கும் வரைக்கும்
காதலராய் சுற்றித் திரிவோம்
கண்டவர் நாணி நம்மைக்
காறித் துப்பட்டும்!
உண்மைக் காதலர்கள்
திருந்தட்டும் நமைப்பார்த்து
மேலைநாட்டுக் காதல் நம் காதல்
சங்க காலக் காதலுக்கு
சங்கு ஊதுவோம் வா, வா.
அன்பு மலர் அவர்களின் இந்த கவிதையை மூன்று வருடங்களுக்கு முன்னமே வெளியாக நான் இன்றுதான் பார்த்தேன். எழுத்து தளம் எந்த தளத்தில் இருக்கிறது . அது கீழ் தளத்தில் இருக்கிறதா ?
நடுத்தளத்தில் உள்ளதா மேல் தளத்தில் இருக்கிறதா. அல்லது தளமே சீர்குலைந்து இறங்கு முகத்தில்
இருக்கிறதா என்ற கேள்வியை மறைமுகமாக எழுப்புகிறது.
கண்டவர் காறித்துப்பட்டும்
நம்மை காறித்துப்பட்டும்
சங்கு ஊதுவோம் வா வா
எருமை ஜென்மங்களுக்கு உறைக்காது
அருமையான கருத்தமைந்த பாடல்