தீண்டாதே தீயவை நூல் ஆசிரியர் கவிஞர் இரா இரவி நூல் விமர்சனம் முனைவர் ஞா சந்திரன்

தீண்டாதே தீயவை!

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

நூல் விமர்சனம் : முனைவர் ஞா. சந்திரன்


அலைபேசி : 98421 93103
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளுதெரு, தி.நகர்,
சென்னை – 17.
தொலைபேசி : 044 2434 2810. பக்கம் : 60, விலை : ரூ.50.

******.

கவிஞர் இரவி அவர்களின் 25ஆம் நூல் ‘தீண்டாதே தீயவை
மது, புகையிலை, சூதாட்டம் இவற்றால் ஏற்படும் சமுதாய சீரழிவுகளை
‘நறுக் ... நறுக்...’ என்று சொற்களை வடித்துள்ளார். போதையால் பாதை மாறிப்போகும் இன்றைய இளைய சமுதாயத்தை தமது கவிதைகள் மூலம் நெறிப்படுத்தி புதுப்பாதையில் செல்ல வழிகாட்டியுள்ளார். சமுதாயத்தின் மீதுள்ள தமது அக்கறையை இந்நூலின் மூலம் மிகவும் எதார்த்தமாக எடுத்துக் காட்டியுள்ளார். அந்நிய குளிர்பானங்களை அகற்றவும் அறிவுரை பகர்ந்துள்ளார். சூதாட்டத்தால் குடும்பங்கள் அழிவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மதியை மயக்கும் மது
மானம் கெட வைக்கும் மது!

வாழ்நாளைக் குறைக்கும் மது
வளங்களை அழிக்கும் மது!

புகையாய் உள்நுழையும் புகையிலை
புற்றுநோயைப் பரிசாகத் தரும் புகையிலை!

புண்பட்ட மனதைப் புகைவிட்டு
புண்ணாக்காதே மேலும்
சிகரெட்!

வருங்கால தூண்கள்
வழுக்கி விழுமிடம்
மதுக்கடை!

என்பன போன்ற ஹைக்கூ புதுக்கவிதைகள் மூலம் இளைய சமுதாயத்திற்கு நல்வழிகாட்டியாக கவிஞர் இரவி திகழ்கின்றார்.

இளையோர் மட்டுமல்ல அனைத்துவகைப்பட்ட மக்களும் வாசிக்க வேண்டிய நூலாகும்.

‘தீண்டாதே தீயவை’ – படி ... விழி ... எழு ... ஒளிர்!

வாழ்த்துக்களுடன்
முனைவர் ஞா. சந்திரன்

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (27-May-22, 12:28 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 37

சிறந்த கட்டுரைகள்

மேலே