தெய்வம் துணையெனத் தேர்ந்திடலே - கட்டளைக் கலித்துறை
கட்டளைக் கலித்துறை
தொடர்வண்டி போலத் தொடர்ந்திடும் வாழ்க்கைத்
..துயர(ங்)களே!
இறங்கும் இடத்தில் இறங்கத்தான் வேண்டும்.நாம்
..யாவருமே!
இறங்கும் இடம்வரை ஏற்படும் துன்பங்கள்
..ஏற்று(க்)கொண்டு
திறம்பட வாழ்ந்திடத் தெய்வம் துணையெனத்
..தேர்ந்திடலே!
- வ.க.கன்னியப்பன்