சேற்றினில் காலூன்றும் சீருழவன் காண் - கட்டளைக் கலித்துறை
கட்டளைக் கலித்துறை
மேற்கில் முகிலிடை மின்னிடும் வானவில் மின்னலுடன்
காற்றொடு வந்த கருமேகம் நல்கும் கனமழையும்
ஆற்றதன் வெள்ளத்தில் அங்குதுள் ளுங்கரு மீன்களுடன்
சேற்றினில் காலூன்றும் சீருழ வன்காண் செழிப்புடனே!
- வ.க.கன்னியப்பன்