பெட்டி நிறையப் பணஞ்சேர்த்த பேதை - அறுசீர் ஆசிரிய விருத்தம்

பெட்டி நிறையப் பணஞ்சேர்த்த பேதை!
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

பெட்டி நிறையப் பணஞ்சேர்த்த
..பேதை போவான் பொட்டென்று;
வெட்டி யானும் ஓர்தடியால்
..விரைந்தே அடிப்பான் ஓரடியே!
செட்டி யும்,வே(று) எவரானும்
..சீர்,கெட் டுப்,போ வாரன்னாள்;
எட்டி உதைக்க வா,முடியும்
..இரக்க மற்ற காலனையே!

- வ.க.கன்னியப்பன்

கருத்து: கவின் சாரலன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-May-22, 1:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே