தொழில விட்டுட்டேன் அண்ணே

டேய் அம்மிக்கல்லு அர்ச்சுனா ஒரு எடத்துக்கு வேட்டைக்குப் போகணும் வாடா.

@@@@@

அண்ணே நான் தொழிலைக் கைகழுவி ஆறு மாசம் ஆகுது. என் மேல் இருபது குற்ற வழக்குகள் இருக்குது. ஒரு கட்சில நம்ம மாதிரி அப்பாவிங்களச் சேத்துக்கறதா தகவல் வந்தது.‌ என் விருப்பத்தைக் தெரிவிச்சேன். என்னை பிணையில் (ஜாமீனில்) எடுக்க இருபது வழக்கறிஞர்கள் வந்துட்டாங்க அண்ணே. இனிமே எனக்கு எந்தக் கவலையும் இல்லை. வீட்டுக்கு வேண்டிய எல்லாம் கிடைக்கும்.
@@@@@
ஏன்டா எதுக்குடா 'அப்பாவிங்க'ங்கிற வார்த்தையைப் சொன்ன?
@@@@@@
அண்ணே கெட்ட நண்பர்கள் பழக்கத்தால் கெட்டுப் போனவங்க நம்மள மாதிரி ரவுடிங்களும் திருடர்களும். நாம அப்பாவிங்தானே.
@@@@@@
ஆமான்டா அம்மி. நீ சொல்லறதும் சரிதான்டா. நானும் அந்தக் கட்சித் சேந்துக்கறன்டா. சிபாரிசு பண்ணுடா.
@@@@@@
அது ஒரு பெரிய விசயமே இல்ல அண்ணே செல்பேசியில தகவல் சொன்னாாப் போதும் உன்னை அழைச்சிட்டு போகக் காரே வரும்.
@@@@@@@
அடே அம்மி. நீ பெரிய ஆளுடா.

எழுதியவர் : மலர் (30-May-22, 12:01 am)
சேர்த்தது : அன்புமலர்91
பார்வை : 61

மேலே