கனவு இல்லம்

அன்று அதிகாலை 4மணிக்கு எழுந்து சமையல் எல்லாம் முடித்து விட்டு வேலைக்கு கிளம்பினாள் ராமாயி

டேய் தம்பி இன்னைக்கு வேலைக்கு போறியா இல்லையாட என்று மகனை எழுப்பினல் ராமாயி எந்த சலனமும் இன்றி உறங்கினான் சிவா
மறுபடியும் கொஞ்ச சத்தமாக எழுப்பினாள்...

Ukraine குடியிருப்பு பகுதியில் விழுந்த குண்டு அவன் காதில் விழுந்தது போல விருட்டுன்னு எழுந்தான் சிவா

எதுக்கு காலையில எழவு உழுந்த மாரி கத்திகிட்டு இருக்க என கேட்டான் சிவா

காலங்காத்தால ஏன்டா எழவு கிழவு னு கத்துறனு ராமாயின் இளைய மகன் சுரேஷ் கேட்டான்

டேய் சுரேசு உனக்கு டீ வேணுமாடா என கேட்டாள் ராமாயி

கொண்டாந்து வை நா முகம் கழுவிக்கிட்டு குடிக்கறேன் என்றான் சுரேஷ் (சுரேஷ் கண் பார்வை அற்றவன் )

டேய் சிவா என கூப்பிட்டவுடன்,

வேலைக்கு போறவனுக்கு தெரியாத சும்மா கத்திக்கிட்டு இருக்க நீ பேசாம வேலைக்கு கெளம்பு என கத்தினான் சிவா

இல்லடா நீ போகலான இன்னிக்கு தண்ணி வரும் புடிச்சு வெக்க சொன்ன அதுதான்.

கட்டிலில் படுத்து கொண்டே ம் ம்.. என்று சொன்னான் சிவா

சரி என சொல்லிட்டு(சித்தாள் )வேலைக்கு புறப்பட்டால் கட்டிடத்திற்கு அங்கு சென்றவுடன்

மேஸ்திரி ராமாயி அக்கா
மேல செவுரு கட்ட கல்லு இல்ல நீ கல் ஏத்து என சென்னார்

சரி என்று கல் ஏத்த ஆரம்பித்தாள் ராமாயி நடைக்கு 6கல் விதம் ஏற்றினால் 3வது மாடிக்கு (ஒரு செங்கல் 3கிலோக்கு குறையாமல் இருக்கும் ) காலை உணவு உண்ட பின் 10மணிக்கு கூட வேலை செய்த கொத்தனார் ஒருவரை தம்பி இந்த phone ல சிவாக்கு ஒரு போன் போட்டு கொடு பா கேட்க சிவாவிடம் பேசினால்

இங்க எல்லாம் தண்ணி வருது நீ தண்ணி புடிச்சியா எனக்கேட்டாள் ராமாயி

அதற்கு சிவா
ஒரு சின்ன வேல நா வெளியில வந்துட்டேன் தண்ணி நிக்கிறதுக்குள்ள போய் புடிக்கிறேன்
தண்ணி ரெண்டு நாளைக்கு ஒரு முறைதான் வரும் இப்போ புடிக்கலன்னா இன்னும் ரெண்டு நாளைக்கு வராதுடா என்று பேசிக்கொண்டே இருக்க அழைப்பை துண்டித்தான் சிவா

சரி சற்று இழைப்பற அமர்ந்தால் அப்படியே கண் அசைந்தால் ராமாயி கனவில் அவளது இறந்த கணவன் கங்காதரன் வந்தார் நாளை எனது நினைவு நாள் வருகிறது நீ நமது குழந்தைகள் மூவரும் ஒன்னு சேர்ந்து நாளைக்கு எனக்கு படையல் போட வேண்டும் என கூறும்போது கைபேசி சிணுங்கியாது விழித்து
ஹலோ என்றதும்

கடும் கோபமாக நான் எத்தன முற சொல்றது அந்த ஆளு சுந்தரம் வருசத்துக்கு மேல ஆவுது வட்டியும் வல்ல அசலும் வருல என்ன நெனச்சுட்டு இருக்குற னு கத்துற

ஒன்னு பணத்த கட்டு இல்ல எடத்த என்பேருல எழுதி கொடுனு சொல்றன் என் மாணமே போகுது கடை விதில நடக்க முடியல என்றான் சிவா

டேய் எழுதி தரதுக்கா அவ்வளவு கஷ்ட பட்டு அந்த இடத்தை வாங்குன என்றால் 27வயசு பய நீ ஒரு வேலைக்கு போறியா சம்பாரிச்சு பணத்த தா தரியா என்றதுமே அழைப்பை துண்டித்தான் சிவா

கல்யாண ஆயி இத்தனை வருசத்துல சொந்த விடுல்லாம வாடகை வீட்டுல இருக்குறப்ப காலி பண்ண சொல்லும் போது எல்லாம் சாமான் எல்லாம் தூக்கிக்கிட்டு வீடு வீடா அலஞ்சது எல்லாம் இவனுக்கா தெரியும் எனக்கு தான் தெரியும் ஏதோ அந்த நல்ல மனுஷன் மேஸ்திரி மாத தவணையில சம்பளத்தை கொஞ்ச கொஞ்சமா புடிச்சு வாங்கி கொடுத்தாப்புல அவனுக்கு என்ன என புலம்பி விட்டு வேலைய அரும்பித்தால்

வேலைமுடிந்து வீட்டுக்கு போனால் போனதும் மகனிடம் தம்பி நாளைக்கு உங்க அப்பா நினைவு நாள் இந்த என்கிட்ட ஆயிரம் ரூபாய் இருக்குது வேண்டிய சாமான் எல்லாம் வாங்கிட்டு வா னு பணத்த கொடுக்கும் போது டேய் உங்க தங்கச்சியும் ஒரு வார்த்தை கூப்பிடலாம் னு பேசும் போதே அவனுக்கு கோவம் தலைக்கு ஏறியது அவ ஓடிப்போயி வேற மதத்துல கல்யாணம் பண்ணது இல்லாம எங்க அப்பனையும் கொன்னுபுட்ட என்றான்

உங்க அப்பா குடிச்சு குடிச்சு செத்ததுக்கு அவ என்னடா பண்ணுவ என்றால் ராமாயி

இந்த வேக்கானம் எல்லாம் பேசாத என கோவமா கெளம்பி போயிட்ட சிவா
டே டேய் சிவா னு கூப்பிட கூப்பிட போய்ட்டான்

மறுநாள் காலையில பணத்த கொடுத்து பொருள் எல்லாத்தையும் வாங்கிட்டு வா என அவனிடம் கெஞ்சியும் சமாதானம் செய்து அனுப்பினால்

சரி என்று அவனும் வாங்கி கொண்டு வந்தான் அவன் அப்பாவிற்கு பிடித்த எல்லாத்தையும் சமைத்து வைத்து அவருக்கு பிடித்த( குவாட்டர் கணேசா பீடி )என எல்லாம் படைத்து கும்பிட்டனர்

காகத்துக்கு சேறு வெக்க வெளியில போன ராமாயி
வீட்டு வாசலில் சுந்தரம் நின்னார்
வாங்க என்றால் ராமாயி

உங்க வீட்டுல விருந்துக்கு வருலமா நா கொடுத்த கடன கேட்டு வந்தேன் ஒன்னு பணத்த கொடு இல்ல இடத்தை எழுதி குடு என கத்தி விட்டு போனார் சுந்தரம்

நடந்த அனைத்தையும் கேட்ட சிவா தன் அம்மாவிடம் சொன்னான் இந்த அவமானம் எல்லாம் நமக்கு தேவையா சொல்லு நாம தான் ரொம்ப கஷ்ட்ட படுறோம் பேசாம அந்த இடத்தை எழுதி கொடுக்க வேண்டியது தானே... சொன்ன உடனே
வந்து கோவம் ராமயிக்கு உங்க அப்பா செத்தாப்போ கையில காசு இல்லாம பொணத்த நடு வுட்டுல போட்டு வெச்சுகிட்டு இருந்தப்ப அந்த இடத்த வெச்சு தான் பணம் கொடுத்தான் அந்த சுந்தரம் சும்மா ஒன்னும் தரல சொந்த வீடு இல்லாம வாடகை வீட்டுல அகதி மாதிரி வாழுற கஷ்ட்டம் எனக்கு தன் தெரியும் போட நான் இருக்குற கவலை படாதனு சம்பாரிச்சு மீட்டுருவோனு சொல்ல முடியல பேச வந்துட்ட இவன்

உங்க அப்பா கஷ்ட்ட பட்டு சொந்த வீடு காட்டுவோமுன்னு ஏதோ பழைய வீடு உடைக்கும் போது ஓடு விட்டம்னு வாங்கி கொண்டு போயி இறக்குனாப்புல அது இப்ப என்ன நிலைமையில இருக்குனு தெரியுமாடா உனக்கு அந்த ஆளு சாகமா இருந்த இந்நேரம் சொந்தமா ஒரு குடிசயாவது போட்டு இருப்பாருடா...

நீ சம்பாரிச்சு கொடுத்தாலும் சரி இல்லனாலும் சரி நா எப்பாடுபட்டாலும் சரி கடன கட்டி பத்திரத்த திருப்பி நா சாகுறதுக்குள்ள அங்க ஒரு கொட்டாயி ஆவது போட்டு அங்கதான்டா சாவேன் என பொறிந்து தள்ளினாள் ராமாயி.....

அவ சொன்னது எல்லாம் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டு அவன் அவ பட்டுக்கு கெளம்பி போனான்...

எல்லாம் என் தலைவிதி என புலம்பினாலும்

தன் முயற்சியில் இருந்து தளராமல் தன் வேலையை செய்யும் கடிகாரம் போல் அடுத்த நாள் காலையில் வேலைக்கு புறப்பட்டால் ராமாயி.........


இவன்
வசந்த் ஆறுமுகம்....

எழுதியவர் : வசந்த் ஆறுமுகம் (29-May-22, 9:10 pm)
சேர்த்தது : Vasantharumugam
Tanglish : kanavu illam
பார்வை : 196

மேலே