லெக்கார் லோக்கார்

சோதிடர்:
(இ)ரட்டைக் குழந்தைக்கு பொறந்தா (இ)ரண்டுக்கும் உச்சரிப்பில கொஞ்சமாவது பொருத்தமா இருக்கிற பேருங்களப் பிள்ளைங்களுக்கு வைக்கணும். அப்பத்தான் அதுங்க வாழ்க்கை நல்லா அமையும். சரி உங்க குழந்தைங்கள்ல முதலில் பொறந்த துக்கு மட்டும் இன்னிக்கு நாளிதழில் பாத்த ஒரு புதுமையான அர்த்தமுள்ள பேரைச் சொல்லறேன். 'லேஹார்'னு வையுங்க. இந்தப் பேருக்கு அருமையான பொருள் உள்ளது. அதை அப்பறம் சொல்லறேன். (இ)ரெண்டாவது குழந்தைக்கு நீங்களே அதே மாதிரி பேரை வையுங்க. நிச்சயமா அந்தப் பேரு அர்த்தமில்லாத பேராத்தான் இருக்கும். அந்தப் பேருங்கதான் குழந்தைங்கள நோய் நொடி இல்லாம காப்பாத்தும்.

குழந்தைகளின் தாய்:
சோதிடரே (இ)ரெண்டாவது குழந்தைக்கு 'லொஹார்'னு வைக்கலாமுங்களா?

சோதிடர்:
சரியாகச் சொன்னீங்க அம்மா. என் மனசில் இருந்தததையே நீங்களும் சொல்லீட்டீங்க. ஐயாயிரம் குடுங்க முதல் பையன் பேருக்கு அர்த்தம் சொல்லறேன்.
(ரூபாய் ஐயாயிரத்தைப் பெற்றுக்கொண்ட பின்பு) 'லேஹார்'னா 'அலைகள்'னு அர்த்தம். சரி நான் வர்றேன்.

சோதிடர் சென்ற பின்பு அறையில் இருந்து வந்த பாட்டி:
ஏன்டி பூங்குழலி, ஐயாயிரம் ரூபா கொடுத்து லெக்காரு, லொக்காருனு பேருங்கள வெலைக்கு வாங்கி வைக்கிறதா உனக்கும் உன்ற வீட்டுக்காரனுக்கும் வெக்கமா இல்ல. குழந்தைகளுக்கு இந்திப் சேருங்கள் வச்சு இழிவு படுத்தறீங்களே? ச்சே. இந்திக்காரங்க நம்ம இந்திப் பேரு வெறியைப் பாத்து காறித்துப்புவாங்கடி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Lehar = Waves.

எழுதியவர் : மலர் (31-May-22, 11:18 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 51

மேலே