சொப்பன சுந்தரி

.... அலுவலக கோப்புகளை எடுக்க மேஜையின் அருகேச் சென்றவன்.. காலையில் வாங்கி வைத்த லெட்டரைப் படிக்கலானான்.

அன்பு ரகு... இங்க அப்பாவுக்கு ரொம்பவும் உடம்பு சரியில்லை.. இப்பவாவது அப்பாவைப் பார்பதற்கு வீட்டுக்கு வரக்கூடாதா? இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த பிடிவாதம்..
3 வருசமா அப்பா உன்னை பார்க்காம ஏங்கிட்டு இருக்காரு... இந்த முறை நீ வந்தா எல்லாம் சரி ஆகிடும்னுத் தோனுது.. உன்னொட பதில் லெட்டர்காக காத்துட்டு இருப்பன் என்று
கடிதம் முடிவைக் கொடுக்க ரகுத் தன் கண்களை மூடி சுவரில் சாயிந்தான்.

கடற்கரையில் காற்று வாங்கியப்படி ரகுவும் ராஜியும் அமர்ந்து இருப்பதை தங்கை சுந்தரி பார்த்து விட்டால் என்பதை அறியாமல்
இன்று எப்படியாவது வீட்டில் சமதம் வாங்கி விடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தான்

இரவு 9 மணிக்கு சரியாக அனைவரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது வீட்டிற்குள் நுழைந்த ரகுவை அப்பா...
ரகு இங்கப் பாருப்பா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. முகம் கைக்கால் அலம்பிட்டு வந்து இப்படி உட்காரு என்றதும்...
சரிங்கப்பா என்று சொன்னவன் தன் காதலையும் அப்பாவிடம் சொல்லிவிட எண்ணம் கொண்டிருந்தான்.

இங்க பாரு ரகு நா சுத்தி வலச்சுலான் பேச விரும்பல உன் தங்கை வீட்டுக்கு வந்து எல்லாம் சொன்னா...
இந்த கடல்ல உட்காரது காத்து வாங்கர்து கடலைப் போடுறது கண்ணீர் விடுரதுலாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது.
உன் மாமன் மக வளர்ந்து நிக்கரா .. அவப் பொறந்தப்பவே அவளுக்கு நீ ன்னு பருசம் போட்டாச்சு. உன் மாமன் அறுவடைக்கு
போனப்பவேக் அவன் மகளுக்கும் உனக்கும் எப்ப கல்யாணம் முடிக்கலாம் கேட்டான்... இப்பதான் உன் மாமன்கிட்ட பேசனன்
அடுத்த மாசமேக் கல்யாணம் வைக்கலானு முடிவுப்பனிட்டோம்... காதல் கத்திரிக்காவலம் தூரப் போட்டு என் மகனா இந்த சொந்த பந்தம் எதிர்க்க என் மானத்த காப்பாத்து..
நம்ம குடும்ப கௌரவத்தை அழிச்சிடாத ஐயா என்று அவர் கைக்கூப்பி நின்று முழு வேதனையுடன் சொன்னது .. அவன் நெஞ்சை யாரோ மூச்சிவிட முடியாமல் ஒருப்பக்கமாகப் பிழிவதுப் போல் இருந்தது.

உன்ணவும் முடியாமல் உறக்கமும் வராமல் விட்டத்தை நோக்கியவன்... என் உயிரில் கலந்தவலை .. அவளின்றி ஒரு அனுவும் அசையாது என்றளவுக்கு என்னில் நிறைந்தவலை..
எப்படி தூக்கி எறிவது.. 6 வருடத்தில் எத்தனை முறை நான் அவளுக்கு நம்பிக்கை கொடுத்திருப்பேன்.ஒரு முடிவுக்கு வந்தவன் போல் கண்களை மூடியவன் விடிந்ததும் போய் சேர்ந்த இடம் மாமன் வீடு.

மாலை வீடுத் திரும்பியவன் எதிர்பார்த்தது தான்.. எழவு விழுந்த வீடுப்போல இருந்தது.அப்பா என்று அருகில் சென்றவனிடம்..
நா உன்ன தலை முழுகிட்டன் வீட்ட விட்டு வெளியே போ.. அப்பா!!! வீட்ட விட்டு வெளியே போடா முதல்ல.. நா செத்தாலும் என் முகத்துல்ல முழிக்காத என்று தன் அறைக்கு சென்று விட்டார்..
அன்று வீட்டை விட்டு வெளியேறியவன் 3 ஆண்டு கழிந்தும் போகவில்லை.. அப்பா சிவமும் அவனை அழைக்கவில்லை...
ரகு சார்.. ரகு சார்.. உங்களுக்கு மெட்ராஸ்ல இருந்து போன் வந்துர்காம் ஏதோ அவசரம்னு பக்கத்து வீட்ல இருந்து சொல்லி விட்டுட்டாங்க...
என்று வேலை செய்யும் பையன் குரல் கொடுத்ததும் பதரி தன் கண்களை திறந்து சுய நினைவுக்கு வந்தான் ரகு.. டேய் மச்சான் போய் பார்ரா என்னனு ...
அவசரம் இல்லாம பக்கத்து வீட்டுக்கு போன் பன்ன மாட்டாங்க என்று அவன் நண்பன் கூற... எனக்கும் எதும் புரியலையெ இதோ போய் பார்க்கரனு விரைந்துச் சென்றான் ரகு.

ஹலோ... ரகு ..கண்ணா.. அம்மா... உம் நான் தான் பேசரன்... இங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லை.. 1வாரமா ஆஸ்பிட்டல்ல இருக்காரு..
உன்ன பார்க்க ரொம்பவும் விருப்படுராரு... நீ அவர வந்து பாரு....எல்லாமே மாறிடும்... கோபத்தால் எதையும் சாதிக்க முடியாது...
என்று தாய் தெளிவுடனும் தைரியத்துடனும் பேசியது அவனுக்கு ஆறுதலை அளித்தது.

அடுத்த ரயிலில் புறப்பட்டவன் மறுநாள் அந்தி சாயும் வேலையில் வீட்டை அடைந்திருந்தான்.... உள் நுழையும்போதே அம்மாவைக் கண்டவுடன் 3வருடம் பார்க்காமல் இருந்த வேதனைக்
கோபம் அனைத்தும் கண்ணீராகிப்போகத் தாயும் மகனும் அழுது விட்டனர்... போ அப்பாவைப் பார்... என்றுக் கூறியதும்... அப்பாவின் அறைக்குச் சென்றவன்.. ஓ என்று அழுதே விட்டான்...
மிகவும் உடல் நளிந்து காணப்பட்டதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ரகு.... உன்னை பார்க்காம எனக்கு எவ்வளவு வருத்தமா இருந்தது தெரியுமா என்று பின்னிருந்து அனைத்த தங்கையைக் கோவதில் தள்ளியவன்..
இத்தனை பிரச்சினைக்கும் நீதான் காரணம் முதலில் இங்கிருந்து துலைந்துப்போ என்றுக் கத்தியவனிடம்.. கோவப்படாதப் பா ‌‌‌‌‌‌‌‌நீ இல்லாம அவ ரொம்ப சிரமப்பட்டுட்டா விடு ... நீ ராஜிக்கிட்ட பேசினியா...
சிறு அதிர்ச்சிக்கு பின் ஒரு வாரமாக பேசலப்பா என்று சிறு சங்கடத்துடன் கூறியவனிடம்... மெதுவாகக் கையைப்பிடித்து ராஜி அப்பாக்கிட்ட பேசிட்டேன் வர மாசம் கல்யாணம் வைக்கலானு முடிவுப்பனிட்டோம் சந்தோஷமா ரகு என்றவரிடம் ...
மனிச்சிடுங்கப்பா என்று கண்ணீர் மல்க அப்பாவை அனைத்வுடன் அப்பாவையும் மன்னிச்சிடு ராஜா உன்னோட உணர்வுக்கு மரியாதைக் குடுத்துர்கனும் என்று அவரும் நாதழுதழுக்க கூறினார். விடிந்தவுடன் சுந்தரி.. அன்பு ரகு நா வீட்டை விட்டு போரன் போ..
இதுக்கு மேல என்னால எதுவும் நடக்க வேணா என்று கடிதம் எழுதியவல் கடைக்கு போய்ட்டு வரேன் மா என்றுக் கிளம்பிவிட்டால்...

கடைத் தெருவில் வேண்டியதை வாங்கியவள் ... ரகுவின் மீதுள்ள கோபத்தால் சிறிது நேரம் கழித்து வீட்டுக்குப் போக எண்ணி.. கிள்ளியூர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தவள் துங்கியும் விட்டால் ..
சிறிது நேரம் கழித்து தூங்கி எழுந்துப் பார்த்தால் பேருந்துக் கடற்கரைச் சாலையில் பயணிப்பதை பார்த்து நடுங்கியவள்.. அருகிலிருந்த பெரியம்மாவிடம் சந்தேகத்துடன் இது எங்க போர பஸ்சு பாட்டிமா என்றுக் கேட்க எண்ணூர் போதுக் கண்ணுனு மறுமொழி உரைத்தார்.
அட ராமா என்று அடுத்த நிறுத்ததில் இறங்கியவள் பீட்ச்சை பார்த்தவாரு அந்த லெட்டரையாவது டிராயர்ல வைக்கர்த்துக்கு பதில்லா வெளியே வட்சிருந்தா யாருனாத் தேடிட்டாவது வந்துர்பாங்க ... யோசிக்கும்போதே இரு பூனைகள் அவள் கால்களை கடித்துவைக்க ...
வலியும் வழித்தவரி வந்த இயலாமையும் அழையும் ஆத்திரமுமாக வந்து அம்மா என்றுக் கத்த... எழுத்துரு கழுதை மணி 6 ஆகுது சாயும் காலம் விளக்கு வச்சு துங்கர்து இல்லாம கனவுக் கண்டுத்து வேற கத்தர்து என்று கூற கண் விழித்தவள் என்னதுக் கணவா என்று சுதாரிக்க..
உங்கலச் சொல்லனும் மா செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சிர்கீங்க என்று ரகு செல்போனை கையில் வைத்தவாரு பேசியதைப் பார்த்தவள்.. அட நமக் கண்டது சொப்பனம் போல நம்ம ரகுக்கு லெட்ர்ல எழுதனும் வீட்டுக்கு வரச் சொல்லி அதுக்கூட ஏதொ 1980 காலம் போல இருந்துதுல...
என்ன சுந்தரி யோசிக்கிற என்று ஒரு இனிய குரல் கேட்கத் திரும்பிப் பார்தவல் அட அன்னி.. ரகுவுக்கு கல்யாணம் ஆகிடுச்சுல ..
அப்ப எல்லாம் கனவா என்று தனக்கு தானே சிரிந்தவள் இது நல்ல கான்சப்டா இருக்கே அடுத்தக் கதைக்கு ஐடியாக் கிடச்சிடுச்சு என்று சிரித்துக் கொண்டே தன்னை சுற்றி இருப்பவர்களை மறந்து மீண்டும் தூங்கிப் போனால்...

--கீரவி

எழுதியவர் : கீரவி (1-Jun-22, 8:42 am)
சேர்த்தது : ர கீர்த்தனா
பார்வை : 639

மேலே