தூய காதல்

அவர்கள் இணைப் பிரியா உண்மைக்காதலர்கள்
ஈருடல் ஓருயிராய் இன்பமாய் உலாவிவர
ஜாதியால் மட்டும் வேறென்று ஒதுக்கப்பட்டவர்கள்
அர்த்தமில்லை க்ரோததால் உற்றார் உறவினரால்
ஒதுக்கப்பட்டு இதோ இன்று இங்கே
வீதியின் நடுவே பட்டாபி பகலில் கொலையுண்டு
கிடக்க......விண்ணில் ஓர் ஒளி எழும்பி
அசரீராய் ஒலித்தது.....; ' வீணர்களே உடலோடு உயிராய்
உலாவிவந்த எங்கள் மண்ணியல் காதலை அழித்ததாய்
இறுமாப்பில் இருக்கிறீர் நீங்கள்,,,,,,எங்கள் காதல்
தீயைப் போல் தூய்மையானது.......அழிவில்லாதது
உடல் அழிந்ததிடினும் அழியா உயிராய்
உயிர்க்கு காதலாய் இங்கு விண்ணில் பவனி வருகின்றோம்
மகிழ்ச்சியின் எல்லையைத் தொட்டு
தூய காதலுக்கு ஏது அழிவு ??????

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Jun-22, 2:14 pm)
Tanglish : thooya kaadhal
பார்வை : 119

மேலே