தேர்வுகள் மாத்திரம் தீர்மானிக்காது

தேர்வில் கேட்கப்படும் வினாக்களுக்கு பதில் அளித்து, அதில் நல்ல மதிப்பெண் எடுத்து, முதலிடம் பெற்றால் மாத்திரம் தான் வாழ்வில் சிறப்பாகவோ அல்லது உயர்ந்த இடங்களில் இருக்கவோ முடியும் என்பதல்ல. அவற்றிற்கு தேர்வுகள் மாத்திரம் துணை நிற்பதும் இல்லை. அது மாத்திரம் தான் எம்மை தீர்மானிக்கும் கருவியும் அல்ல என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தேர்வு என்பது எமது அடைவு மட்டம் எந்தளவிற்கு இருக்கிறது என்பதனை அறிந்திட உதவுகின்றது. தேர்வில் முதலிடம் பெற்றவர்கள் மாத்திரம் தான் இன்று உயர்ந்த இடங்களில் இருக்கின்றார்களா என்று பார்த்தால், அங்கே அதற்கான வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கின்றது.

கல்வியில் பின்தங்கியவர்கள் வியாபாரங்களில் உயர்ந்து பல பேரின் வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடியவர்களாக இருக்கின்றனர். பலருக்கு முன்மாதிரியாகவும் திகழ்கின்றனர்...

தேர்வுகளால் மாத்திரம் எம் திறமைகளை மதிப்பீடு செய்திட முடியாது.

இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா

எழுதியவர் : அறூபா அஹ்லா (3-Jun-22, 2:15 pm)
சேர்த்தது : அறூபா அஹ்லா
பார்வை : 42

சிறந்த கட்டுரைகள்

மேலே