தடம் பதிக்க வேண்டாமா

வாழ்வில்
தடம் பதிக்க வேண்டாமா
தடம் பதிக்க வேண்டாமா
என்று கேட்கிறார்கள்
கூட்டத்தோடு கூட்டமாக
வடம் பிடிப்பவர்கள் நாங்கள்
தேர்க்கால் பதித்த
தடத்தை
கண்ணில் ஒற்றிக் கொள்வோம்
தேர்க்கால் தடமே
எங்கள் தெய்வீகத் தடம்
என்கிறான்
பக்தியில் திளைக்கும் பாமரன் !!!

எழுதியவர் : கவின் சாரலன் (3-Jun-22, 2:33 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 73

சிறந்த கவிதைகள்

மேலே