பணம் சுரண்டி
பணம் சுரண்டி
@@@@@@@@@@
கோபுரம் பொறித்த முடங்கல்(மடல்) தன்னில்
கோனல் கோனலாய் கையொப்பக் கிறுக்கல்...
அரசை இயக்கும் வலவன்(ஓட்டுநர்) என்று
ஐந்தாண்டு சுரண்டும் அரசியல் கிறுக்கன் ...
செப்பம்(நடுநிலை) இங்கே உப்புக்கும் இல்லை
கப்பங்கள் விதித்தே தெப்பத்தில் மிதப்பு....
தெள்ளியன் (அறிவுடையோன்) என்பது திருட்டினில் இருந்தால்
வல்லவன் என்றே வாழ்த்திடும் மக்கள்...
ஆயிரம் படித்த வியவனும்(அரசு அலுவலர்) இங்கே
அவன் சொல்ல செய்யனும் பைத்தியவேலை...
மேழி ( நிலம் உழும் கலப்பை ) பிடித்திட்ட அரசியல் கிறுக்கன்
தாலியும் அறுக்கிறான் தன்குதிர் நிறைக்க...
புதவி( மதகு) திறந்ததும் பொங்கிடும் நீராய்
பதவி கிடைத்ததும் பணம்பங்கிட்டுக் குவிக்கிறான்...
பணம் இனி செல்வது அரசியல் மார்க்கம்
பாமரன் வாழ்வில் தோன்றியது ஒற்கம் (வறுமை)...
வானம் சிவக்கும் வைகுதல்(விடிதல்) தோன்றும்
பூனையாய் மறைப்பான் ஆட்சியின் முடிவில்...
கடிப்பம்(அணிகலன்)பூட்டி அரசுக் கட்டிலில் அமர்ந்ததும்
துடைப்பமாய்மாறி பணம் துடைத்தெடுக்கிறான் நாட்டில்...
அரசின் வேற்றலம் (காற்று)அடிக்கின்ற வேகம்
பரிசாய் மீந்திடும் பாமரனின் பாவம்...
மக்கள் வரியில் கொக்கரிக்கும் அரசே
வெட்கமாய் இருக்கு இதில் வியலிகை(பெருமை) எதற்கு ?
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢