கம்பரின் காதல் பெண்டிர்

பழனி ராஜன் வெண்பா

வாளென நீள்விழி வான்பிறை நெற்றியாள்
தாளெல்லாம் கற்றுபெரும் மாடுகொண்டார் -- நாளெல்லாம்
வாடுவறி யோர்க்கிடம் கைவிளையு டன்விருந்து
மாடுமீந்து போற்றுவர் பார்

கம்பன் எழுதிய கலிவிருத்தம்

பெருந்த டங்கண் பிறைநுத லார்கலெலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்து மன்றி விளைவன யாவையே.



பெண்கள் இராமாயண காலத்தில் தன்னிச்சையாக செயல்பட முடியாத காலமாம்
இருப்பினும் கம்பர் தான் விரும்பும் பெண்கள் பிற்காலத்தில் இப்படி இருப்பர்
என்று விளக்குகிறார்

வாளினை யொத்த நீண்ட பெரிய கண்களையுடைய வர்களும் ,பிறைச் சந்திரனைச்
யோத்த நெற்றியை உடைய பெண்கள் கல்வியறிவு மிகுந்தும் செல்வம் கொழித்த
வர்களாக ஆணுக்கு நிகராக இருப்பார்களென்றும் அவர்கள் வறியர்களைக் கண்ட
மாத்திரத்தில் அவர்களுக்கு தங்க இடமும் விருந்தும் விளைந்த தானியமும்,
கைப்பொருளும் கொடுத்து உபசரிப்பார்கள் என்று பாரதியை காட்டிலும் ஆயிரம்
ஆண்டுக்கு முன்பே நினைத்து வெளிப்படுத்தி யுள்ளது அவர் பாட்டால் விளங்கும்



.....

எழுதியவர் : பழனி ராஜன் (6-Jun-22, 9:04 am)
பார்வை : 53

மேலே