ஆயிரமாம் துன்பங்கள் அணிவகுத்து நின்றாலும் - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(1, 5 சீர்களில் மோனை)
ஆயிரமாம் துன்பங்கள் அணிவகுத்து நின்றாலும்
..ஆன்றோர் நல்லார்
தீயனவை செய்திலரே; தெய்வத்தை மறந்திலரே;
..தேவை யென்றால்
தூயனவாய் நற்செயல்கள் துள்ளலுடன் செய்திடுவர்
..துயரந் தீர்க்க;
வாயுதவி செய்துநமை வம்பரிடம் காத்திடுவர்
..வன்மை யோடு!
- வ.க.கன்னியப்பன்