பாடிடும் தென்றல் பாங்குடன் என்றனை வாழ்த்தும் - எழுசீர் ஆசிரிய விருத்தம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(1, 5 சீர்களில் மோனை)
தேடிய தென்றல் திரிந்திடும் அலையில்
..தெளிவுடன் நலமெனைக் கேட்கும்;
மூடிய முகிலுந் திரையினை விலக்கி
..முழுவதும் மேனியைச் சூழும்!
வாடிய மலர்கள் வளமிக மலர்ந்து
..வகையுடன் மேனியில் தூவும்;
பாடிடும் தென்றல் பரவசங் கொண்டு
..பாங்குடன் என்றனை வாழ்த்தும்!
- வ.க.கன்னியப்பன்