சிற்றீச்சம்பழம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சிற்றீந் தெனுங்கனிக்குச் சீதம் உழலையொ(டு)
உற்ற சிரங்குகளும் உண்டாகும் - சுற்றிச்
செறியும் பலபிணியுந் தேமொழியே நாளும்
அறிவும் மழுங்கும் அறி
- பதார்த்த குண சிந்தாமணி
சிற்றீச்சம் பழத்திற்குச் சீதபேதி, உழலைநோய், சிரங்கு முதலான பற்பல நோய்களும் நீங்கும் .