பாதிரா

என்னங்க பக்கத்து வீட்டு கடைசிப் பையன்....

இரண்டாம் வகுப்பு படிக்கிற பையனா?

ஆமாங்க.

அவனுக்கு என்ன?

இல்ல அந்தப் பையனை 'ஆதிரா, ஆதிரா'னு கூப்பிட்டாங்க. அது மாதிரி பேரை நம்ம பையனுக்கும் வச்சிருக்காங்க.‌

சரி கன்கா. நீ நெனைக்கிற‌ பேரையே வச்சிரு.

நம்ம பையனுக்கு 'பாதிரா'னு வச்சிருக்காங்க.

ஓ... வச்சிருலாமே. எல்லாரும் 'பாதிரா' இந்திப் பேருனு நெனைச்சு "ஸ்வீட் நேம்"னு சொல்லுவாங்க.

(ஒரு நாள் ஆதிராவின் தாய் கன்கா வீட்டுக்கு வந்து நலம் விசாரித்து விட்டு):
கன்கா உங்க பையனுக்கு என்ன பேரு வச்சிருக்கீங்க?

உங்க பையன் ஆதிரா பேரு மாதிரி 'பாதிரா'னு எங்க பையனுக்கு வச்சிருக்கிமுங்க.

ஐயோ, எங்க பையன் பேரு 'ஆதி'ங்க. நாங்க தெலுங்கு பேசறவங்க. "ஆதி வா"ங்கிறதத்தான் "ஆதிரா" இல்லனா "ஆதி இக்கட ரா" "ஆதி இங்க வா" னு கூப்புடுவோம்.

ஐய்யய்யோ உங்க பையன் பேரு ஆதிரானு நெனைச்சு எங்க பையனுக்கு 'பாதிரா'னு பேரு வச்சுட்டோம்‌.

அதுக்கென்னங்க. இந்திப் பேரு மாதிரி இருக்குது. ஸ்வீட் நேமுங்க.

இப்பத்தாங்க எனக்கு சந்தோசமா இருக்குதுங்க.
######################################

Athira = Prayer, quick, lightning. Feminine name

எழுதியவர் : மலர் (9-Jun-22, 4:14 pm)
சேர்த்தது : மலர்1991
பார்வை : 42

மேலே