தாண்டே

தம்பி‌ நீ யாரு? புதுசா இருக்குது. இதுவரை எங்கிட்ட சோசியம் பாக்க வந்ததில்லையே?
#####
சோசியர் ஐயா,
உங்க பக்கதூரு காட்டூரு. எல்லாம் சொன்னாங்க இஷ்டலிங்க சோசியர் ஐயா சொன்னா சொன்னபடி நடக்கும்னு. அதுதான் உங்களைப் பாக்க வந்தேன். எம் பேரு திலகர்‌. அதை 'தில்கர்'னு மாத்திட்டங்க. என் மனைவி பேரு மல்லிகா. அந்தப் பேரை 'மல்கா'னு சுருக்கிக் கூப்புடுவேன். என் மனைவி மல்காவுக்கு முதல் மகப்பேறு. ஆண் குழந்தை நேத்து மாலை சரி 6.30க்குப் பொறந்துச்சுங்க. அது உங்ககிட்ட சாதகம் எழுதலாம்னு வந்தாங்க.
######
தம்பி தில்கர், கொழந்தை பொறந்த தேதி, நேரத்தைச் சொன்னாப் போதும். கொழந்தையோட எதிர் காலத்தை அச்சே நிமிசத்தில கணிச்சுச் சொல்லிடுவேன். உன் பையனுக்கு நீ தமிழ்ப் பேரைக் கண்டிப்பா வைக்கமாட்ட.
#######
சத்தியமா தமிழ்ப் பேரை வச்சு எங் கொழந்தையைக் கேவலப்படுத்தமாட்டேன். பிறமொழிப் பேரைக் தன் பிள்ளைக்கு வைக்கிறவன் தான் உண்மையான தமிழன். நீங்களே என் பையனுக்கு ஒரு இந்திப் பேரைச் சொல்லுங்க ஐயா.
#######
நான் இன்னிக்கு காலைல நாளிதழில் பார்த்தேன். வட மாநிலம் ஒண்ணுல பிரபலமான ஒருத்தரோட பேரு 'காண்டே'னு முடியுது. உன் பையனுக்கு 'தாண்டே'னு வச்சிடு. அவன் நல்லாள் படிச்சு பட்டம் வாங்கி அமெரிக்கா ‌போவான். பச்சை அட்டையும் (Green Card) வாங்கிடுவான். நீயும் வேளாண்மை செஞ்சு நட்டப்படறத விட்டுட்டு அமெரிக்கா போயி சொகுசான வாழலாம். இந்த இஷ்டலிங்க சோதிடர் சொல்லறது எதுவும் தப்பாப் போனதில்லை. இந்த கையில் பிடி கணிப்பொறி சாதகம். எடுத்து வை இரு நூறு ரூபாய். பேரு வச்சதுக்கு ஐநூறு கொடு. பையன் பேரு ஞாபகம் இருக்குதா தில்கர்?
#######
இருக்குதுங்க ஐயா. 'தாண்டே' சுவ்வீட்டு நேமுங்க சோசியரே.
######
எழுநூறு ரூபாயை அந்தத் தட்டில வச்சிட்டுப் போய்ட்டு வா.
#########
வர்றாங்க சோசியரே.

எழுதியவர் : மலர் (10-Jun-22, 6:02 pm)
சேர்த்தது : மலர்1991
பார்வை : 35

மேலே