காதலா இதுதான் காதலா 555

***காதலா இதுதான் காதலா 555 ***
ப்ரியமானவளே...
மூங்கிலில்
உட்சென்று வரும் காற்று...
மெல்லிசையாக
மனதை வருடுகிறது...
பூவுக்குள்
சுரந்திருக்கும் தேன்துளி...
வண்ணங்கள் பலகொண்டு
வளைந்து வரும் வானவில்...
மாலை நேரத்தில்
செக்க சிவக்கும் வானம்...
காலையில் மெல்ல
உதிக்கும் சூரியன்...
சலசல சப்தத்தோடு ஓடிக்கொண்டு
இருக்கும் நீரோடை...
இரவில்
மின்னும் நட்சத்திரங்கள்...
ஆற்றங்கரை நாணலில் கூட்டம் கூட்டமாய்
சேர்ந்திருக்கும் மீன் குஞ்சுகள்...
அதிகாலையில் மரத்தில் சுகமாக
சப்தமிடும் பறவைகள்...
என்னை கண்டதும்
ஓடிமறையும் வயல் நண்டுகள்...
தினம் தினம் இவை
எல்லாம் ரசிப்பவன் நான்...
உன்னை
கண்ட நாள் முதல்...
முற்பொழுதும்
உன் நினைவாகவே...
மொத்த இயற்கையையும்
மறந்துவிட்டேன் உன்னால்...
தனிமையில் நான்
ரசித்த எல்லாவற்றையும்...
உன்னுடன் நான் சேர்ந்து
ரசிக்க வேண்டும் தம்பதிகளாக...
அந்த நாள் எந்நாளோ
என் கண்மணி.....
***முதல்பூ.பெ.மணி.....***