கொடிமின்னல்

கொடிமின் னல்தான் உந்தன் கவர்ச்சி

நேரிசை ஆசிரியப்பா

வெளிச்சம் காட்டும் நிலாநீ யென்றாய்
குளிரை சேர்த்தவள் குளிர்நிலா வென்றாய்
பாசங் காட்டும் வாசரோசா வென்றாய்
மெல்லிய மலரென்றாய் உண்மைய துதானே
புள்ளி மானவள் துள்ளி ஓடையில்
மருளும் விழியும் மானென மொழிந்தனை
கொடியே யென்றது ஒடியிடை நிலையது
கொடிமின் னல்தான் உந்தன் கவர்ச்சி
மலையரு விநின்நீள் தேகம்
கொற்கை முத்தாம் நின்பல் வரிசையே


நீள்கோ டுன்நாசி பவழமுன் னிதழாம்
வெண்சங் காம்நின் நீண்டக் கழுத்தும்
மடலின் தாழைக் காது கேளும்
கச்சைக் கொள்ளு மிச்சை மார்பும்
கார்கூந் தல்வான் நீந்தக் கண்டார்
பிஞ்சு நீண்ட வெண்டை விரல்
வளைநெளி அழகு அகண்ட மர்மம்
வாழைத் தண்டாம் கவிழ்தொடை யென்றாய்
காலும் மூங்கில் முனையாம் பஞ்சு
பாதம் மென்மை குறிக்கசொன் னாயோ

நேரிசை வெண்பா

அவளவ யத்தொப்பீ டென்று பலதாய்
தவறா தினங்கிறுக்கி பாட்டு --- அவலமாய்
கொட்ட தினமதைக் கேட்பதார் சொல்கண்ணே
வெட்கமிலா தானின் பிழைப்பு


குறள் வெண்பா

இலக்கணப் பாட்டை எழுதக்கல் லென்றிடக்
காதல்கத் ரிக்காயெ தற்கு



.....

எழுதியவர் : பழனி ராஜன் (11-Jun-22, 11:21 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 47

மேலே