அவள்
துறவறம் நாடி கானகம் நோக்கி போனான்
வழியில் நதிக்கு கரையில் குளித்துவிட்டு
கட்டுக்கடங்கா கார்முகில் கூந்தலை
கோதி உலர்த்தி பின்னிக் கொண்டையிடும்
எழிலே உருவாய் அவளைக் கண்டான்
தன்னை மறந்தான் துறவையும் பின்னே
அவளை நாடி அவள் பின்னே அவன்