புனைந்த புதுநாவல் நாயகிபோல் நீவந்தாய்

மனமெனும் மௌனப் பெருவெளியில் ஓடும்
நினைவெனும் நீரோடையின் மெல்லிய சலனத்தில்
கனவுத் தேவதையாய் காற்றினில் குழலாட
புனைந்த புதுநாவல் நாயகிபோல் நீவந்தாய் !

-----கலிவிருத்தம்
ஒரே எதுகை நான்கு சீர்களால் நான்கு அடிகளில்
அமையும் கலிவிருத்தம்
இது கம்பன் வென்ற பாவினத்தைச் சேரும்
பிளவுபடாத சொல்லே சீராக அமைந்திருப்பது
இக்கவிதையின் சிறப்பு

மனமெனும் மௌனப் பெருவெளியில்
நினைவெனும் நீரோடையின் சலனத்தில்
புனைந்த புதுநாவல் நாயகிபோல்
கனவுத் தேவதையாய் நீவந்தாய் !

----அதே பாவினம் முச்சீரால் பொலிவு பெற்று
வஞ்சி விருத்தம் ஆனது

எழுதியவர் : கவின் சாரலன் (11-Jun-22, 5:18 pm)
பார்வை : 48

மேலே