முகமும் மலரும்

கருவில் தோன்றி...கருவில் வளர்ந்து ...
உருவாய் பிறக்கும் பிறப்பே...
வளரும்போது தடைகள் உடைத்து
கருத்தாய் வாழ்வது சிறப்பே.
தொடரும் ஓட்டம் ...வீழ்வது சகஜம்
எழுந்து தொடர்வதுன் பொறுப்பே.

கவனம் சிதறும். கவலை வேண்டாம்
கடின உழைப்பே சிகரம் ஏற்றும்.
கருத்ததனை ஒருமுகபடுத்தி
ஆணிவேராய் மனதில் விதைத்து
பயன் தனை நோக்காது
உழைத்திடின் வாழ்வினை
வெல்வது நிஜமே.

பழிகள்தன்னை பிறரின் முதுகில்
நாளும் சுமத்தி நழுவப்பார்க்கும்
நாசக்கார எண்ணம் வேண்டாம்.
உந்தன் கையை உள்ளபடி நம்பி
உவகையுடன் எழுந்தே போரிடு.
தடையாய் நிற்கும் தடைகள் யாவும்
எவரெஸ்ட் மலையாய் உயர்ந்தே நிற்பினும்
எளிதே ஏறி கொடியை ஏற்று.
கொண்டாடியே உலகம் போற்றும்.
மகிழ்வினில் உந்தன் மனமும் துள்ளும்.
பூச்செண்டாய் உந்தன் முகமும் மலரும்!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (11-Jun-22, 6:16 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : mugamum malarum
பார்வை : 413

மேலே