பருந்துக் கிரையாமிவ் யாக்கையைப் பெற்றால் மருந்து மறப்பதோ மாண்பு – அறநெறிச்சாரம் 118

நேரிசை வெண்பா
(‘ப்’ ‘க்’ வல்லின எதுகை)

மூப்புப் பிணியே தலைப்பிரிவு நல்குரவு
சாக்காடும் எல்லாம் சலமிலவாய் – நோக்கீர்;
பருந்துக் கிரையாமிவ் யாக்கையைப் பெற்றால்
மருந்து மறப்பதோ மாண்பு? 118

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

மூப்பு நோய் மனைவி மக்களைப் பிரிதல் வறுமை மரணம் ஆகிய இவைகள் எல்லாவற்றையும் அவற்றின் காரணங்களையும் பொய்யின்றி மெய்யாக ஆராயமாட்டீர்,

கழுகுகளுக்கு இரை ஆகிய இவ்வுடலைப் பெற்றால் இனி உடலையடையாவாறு தடுக்கும் மருந்தாகிய தவத்தினை மறப்பது பெருமையாகுமோ? ஆகாது.

குறிப்பு:

''பருந்துக் கிரையா மிவ் யாக்கையைப் பெற்றால், நோக்கீர், மறப்பதோ மாண்பு'' எனக் கூட்டிப் பொருள் காணலுமாம். யாக்கை - உடல்:

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jun-22, 8:33 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே