கோடைவிடுமுறைக்கு பின்

சொந்த ஊருக்கு பயணிக்கிறேன்
கோடைவிடுமுறையில்..

உறவுகளை பார்க்கப் போகும்
உற்சாகம் ஓடிவந்து
ஒட்டிக் கொண்டது மனதோடு
ஏதும் சொல்லாமல்..

சொந்தங்கள் ஆயிரம் இருந்தும்
தனித்தீவென வாழ்ந்து கொண்டிருக்கும்
எங்களின் பிள்ளைகளுக்கு,

உறவுகளை அறிமுகம் செய்யப்போகும்
ஆனந்தம்
பாசங்களை பரிசளிக்கப்போகும்
சந்தோசம்

வேலை நிமித்தம் வெளியூரில்
அகதியாகிவிட்ட எங்களுக்கு
இப்படியான விடுமுறைகள் தான்
உறவுகளின் வாசம்
காட்டிச்செல்கிறது..

ஒரு மாத இடைவெளிக்கு பின் மீண்டும்
எழுத்து தளத்தில் பயணிக்கும் மகிழ்ச்சியுடன்

அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (12-Jun-22, 4:22 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 26

மேலே