தப்பெண்ணம்
தப்பெண்ணம்.
அழகி அவள்!
ஆசைகள் பல
என் மனதில்
வார்த்தவள்.
வருவாள் அவள்
அடிக்கடி என் வீடு,
அரட்டை அடிக்க
என் தங்கையுடன்!
அவள் குரலில்,
ஒர் இனிமை!
அவளுக்கு பெயர்
தேன் மொழி.
அவளும் நானும்
பேசியதில்லை,
கண்கள் இரண்டும்
பேசியதுண்டு.
காலம் கரைந்து
ஓடியது,
நம் வயதும்
சேர்ந்து ஓடியது.
ஒருநாள் அவளை
வழி மறித்தேன்,
அவளோ விலகி
சென்று விட்டாள்.
அப்புறம் அவள்
வருவதில்லை,
எனக்கு புரிந்தது
என் தப்பு.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.