வினையாள்
இரட்டைப் பிறவிகள்
ஆண் குழந்தையும்
பெண் குழந்தையும்
முதல் மகப்பேறிலே!
பையனுக்கு வினை என்று
பெயர் வைத்தீர்! பெண்
குழந்தைக்குப் பொருத்தமாய்
பெயர் வைக்க வேண்டாமா?
அடியே முட்டாள் பேத்தி
வீரமங்கை வேலுநாச்சியார்
நீ அறியாத பெயரா?
காரைக்கால் சென்றதுண்டா?
அங்கு சிறுமிகள் பலரை
நாச்சியார் என்றழைப்பதை
காது குளிரக் கேட்டுள்ளேன்.
அப்பெயருக்கு என்னடி குறை?
உன் பையன் 'வினை' யென்றால்
பெண் குழந்தைக்கு எப்பெயர்
பொருத்தமான பெயர்?
அப்பெயரே 'வினையாள்'.
"வினையாள் வினையாள்"
என்றே கொஞ்சுவேன் அவளை.
அதுவே காலமெல்லாம்
அவள் பெயராய் நிலைக்கட்டும்!
********************************************************
Vinay = Polite, Good manners, Modesty.
Sanskrit word