கற்பகவல்லினின் பொற்பதங்கள் மெட்டு

கற்பகவல்லினின்  பொற்பதங்கள் மெட்டு

அம்மா கீர்த்தனை

அன்னையே உந்தன் மலரடி பணிந்தேன்
அருள் புரிவாயம்மா........

அனுதினம் பாடினேன் அருள்தனை நாடினேன்.....
ஆ.................(அனு)
அடைக்கலம் உந்தன் பாத கமலங்கள் (அன்னையே)

நீயிந்த வேளை தன்னில் சேயாம் எனை மறந்தால்
நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ
ஏனின்னும் மௌனம் அம்மா
ஏழை எனக்கருள
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா
(அன்னையே)

எல்லோர்க்கும் இன்பங்கள் நிறைந்திட அருள் புரிவாய்
நல்லவர் நாவினில் குடியிருப்பாய்
கல்யாணியில் உன் புகழ் தன்னைப் பாடினேன்
வல்லவளே நலம் பெருகிட அருள்வாய்
(அன்னையே)

நாளும் உன்னப் பாட நல்லருள் புரிந்திடுவாய்
தேடும் மனம் தனிலே திருவே குடியிருப்பாய்
பாடும் அடியார் வினை..............(2 )
தீர்த்தருள் புரிந்திடுவாய்
வாடும் உள்ளத்திருக்கு நல்மருந்தாகிடுவாய் (அன்னையே)

எங்களைக் காத்தருள் எழில் நிறை தெய்வமே
பொங்கும் மங்களம் புரிந்தருள் செய்வாய்
தங்கிடும் இன்பமே தாயே உன் அருளாலே
எங்கணும் நிறைந்திருக்கும் எழிலே காத்தருள்வாய்
(அன்னையே)

எழுதியவர் : ஸ்ரீ G S விஜயலட்சுமி (6-Oct-11, 12:02 pm)
பார்வை : 267

சிறந்த கவிதைகள்

மேலே