துன்பத்துள் துன்பம் உழப்பர் துறந்தெய்தும் இன்பத்து இயல்பறியா தார் – அறநெறிச்சாரம் 119

நேரிசை வெண்பா

நீக்கருநோய் மூப்புத் தலைப்பிரிவு நல்குரவு
சாக்காடென்(ற) ஐந்து களிறுழக்கப் - போக்கரிய
துன்பத்துள் துன்பம் உழப்பர் துறந்தெய்தும்
இன்பத்(து) இயல்பறியா தார் 119

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

பற்று விடுவதனால் அடையும் இன்பத்தின் தன்மையை அறியாதவர்கள், தீர்த்தற்கு அரிய நோயும், கிழத்தன்மையும், மனைவி மக்களைப் பிரிதலும், வறுமையும், மரணமும் ஆகிய ஐந்து யானைகளும் வருத்த நீக்குதற்கு அரிய மிகப்பெருந் துன்பத்தினை அனுபவிப்பார்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jun-22, 4:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே