எக்காலும் சாதல் ஒருதலையே யானுனக்குப் புக்கில் நிறையத் தருகிலேன் – அறநெறிச்சாரம் 120

நேரிசை வெண்பா

எக்காலும் சாதல் ஒருதலையே யானுனக்குப்
புக்கில் நிறையத் தருகிலேன் - மிக்க
அறிவனை வாழ்த்தி அடவி துணையாத்
துறத்தன்மேற் சார்தல் தலை 120

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

நெஞ்சே! எப்பொழுதாவது இறப்பது உறுதி; நான் உனக்கு அழியும் தன்மைத்தாகிய உடலை மேலும் மேலும் கொடுத்துக் கொண்டிரேன்,

உயர்ந்தோனாகிய அருகக்கடவுளைத் துதித்து வனத்தைத் துணையாகக் கருதியடைந்து துறவறத்தினை யடைந்து வாழ்தல் சிறந்ததாகும்.

குறிப்பு:

புகு + இல் = புக்கில்: உயிர்புகும் வீtடாகிய உடல், ஒரு தலை - உறுதி;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jun-22, 4:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே