முடிவுகள்
மனிதர்கள்
எடுக்கும் முடிவுகள்
அனைத்தும்
வெற்றி பெற்று விடாது
வெற்றி பெறவும் கூடாது
அப்படி வெற்றி பெற்றால்
தலைக்கனம்
கண் மண் தெரியாமல்
தலை விரித்தாடும்...!!
அதே சமயத்தில்
வெற்றி பெறாத
முடிவுகள் யாவும்
தவரென்று ஆகிவிடாது..!!
மனிதர்களின்
வாழ்க்கை என்பதே
வெற்றி தோல்விகளின்
கலவைதானே...!!
--கோவை சுபா