புணர்வதை ஒழித்திருப்பான்

வெளிவிருத்தம்

மனிதனுள் பிரிவினை விதைத்தே வைத்தவன் - ஈனன்
மனிதனால் அதனையும் மதிக்கவே செய்தவன் - ஈனன்
மனிதரை மறைகளே பிரித்ததாய் சொன்னவன் - ஈனன்
மனிதரை மறையுள் பிரித்தபடி. எழுதியவன் - ஈனன் -- (க)

படைத்தவன் படைத்ததை படயலிட்டு படைத்தவன் - மனிதன்
படைத்த உயிர்களை வெட்டியே உண்டவன் - மனிதன்
வடித்த உணவுகளை கடைவைத்து விற்பவன் - மனிதன்
நடித்தே எவறையும் ஏமாற்றிடும் பூதக்கொல்லி - மனிதன் -- (உ)

உயர்ந்த மனிதனை படைக்கவே விரும்பிடின் – இறைவன்
மயிரின் நிறத்தில் பலவகை வைத்திருப்பான் - இறைவன்
உயிர்கள் பிறக்க புணர்வதை ஒழித்திருப்பான் - இறைவன்
வயிற்றுள் செரிமான குழலையே அழித்திருப்பான் - இறைவன் (ங)

அழியும் மனிதரின் உருவத்தில் இறைவுரு - தவறுதானே
பழிக்கஞ்சா வீணர்களின் மறையுள் இறைபொருள் - தவறுதானே
வழிகோலும் தமிழின் இறைவுண்மையை இயம்பாமை - தவறுதானே
தழைத்திடும் ஆதியின் செந்தமிழ் மறைப்பும் - தவறுதானே (ச)

நாலுக்கால் கொண்டதால் உயிரனப் பெயரோ - மிருகம்
நாலுசக்கர வாகனம் ஓட்டிடும் மனிதவகை - மிருகம்
நாலுக்கால் கொண்ட பறவைக்கு பெயரும் - மிருகம்
ஆலயங்களின் பலவகை சிற்பங்களில் வடிவிட்டனர் - மிருகம் (ரு)
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (14-Jun-22, 9:16 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 25

மேலே