காமமும் மோகமும்

ஒரு விகற்பக் குறள் வெண்பா

உழவனும் இல்லையெனில் ஞாலமும் என்றும்
அழியாது என்பதை கொள்.

அமிழ்ந்தது நீருள் நிலமும் புதைந்தே
நமது சரித்திரமோ அல்

பலநாள் தெளிந்தாலே ஆகுமே யாதும்
புலப்படும் எல்லாம் முதிர்வு

உலகமும் தோன்றையில் தோன்றியது உப்பு
பலவகை நீரிலே சேர்ந்து

காமமும் மோகமும் காதலென சொல்லியே
சால தமிழகத் தில்

காதல் வருமே கடவுளின் மீதுமே
சாதலின் பின்பும் திடம்

உள்ளக் கிளர்வால் வருவது காமமாம்
கள்ளமாய் எண்ணந் தரும்.
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (13-Jun-22, 6:58 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 99

மேலே